வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ளது அய்யர் பாடி எஸ்டேட் இங்கு 600க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசின் நியாய விலைக்கடை மூலம் பொருட்களை வழங்குவதற்காக ரோப்வே பகுதியில் நியாயவிலைக் கடை ஒன்று இயங்கி வருகிறது.

பள்ளிக்கூடம் மற்றும் குடியிருப்புக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த நியாயவிலைக் கடையை சுற்றி, இன்று அதிகாலையில் 5 காட்டு யானைகள் இப்பகுதியில் முகாமிட்டன. பின், நியாயவிலைக் கடையை முற்றுகையிட்ட காட்டுயானைகள்், கடையின் ஜன்னல் கதவுகளை உடைத்து உள்ளே இருப்பு வைக்கப்பட்டிருந்த அரிசி பருப்பு போன்ற பொருட்களை தின்றும், தூக்கி வீசியும் சேதப்படுத்தின. இதன் காரணமாக கடையின், ஜன்னல்கள் கதவுகள் உடைந்து முற்றிலும் சேதமடைந்தன.

காட்டு யானைகளால் நியாயவிலைக்கடை உடைக்கப்படும் சத்தம் கேட்டு, அப்பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு வனத்துறையினருடன் இணைந்து பல மணி நேரம் போராடி அந்த யானைகளை அங்கிருந்து விரட்டியடித்தனர். தொடர்ந்து, காட்டுயானைகள் அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியே வருவதும், அங்குள்ள குடியிருப்பு பகுதியில் முகாமிட்டு வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று இரவு மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் யானை கூட்டம் வருமோ? என்ற பயத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். இதனால், வனத்துறையினர், அய்யர் பாடி மற்றும் ரோப்வே பகுதியில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு காட்டு யானகளை கண்காணித்து வருகின்றனர்