ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன உயிரின கணக்கெடுப்பு பணி துவக்கம்..!

பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன உயிரினங்கள் கணக்கெடுப்பு பணி இன்று துவங்கியது. ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர், பொள்ளாச்சி என இரண்டு கோட்டங்கள் ஆகவும் பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி, அமராவதி, உடுமலை என ஆறு வனச்சரகங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன உயிரினங்கள் கணக்கெடுப்பு பணி இன்று துவங்கியது. ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர், பொள்ளாச்சி என இரண்டு கோட்டங்கள் ஆகவும் பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி, அமராவதி, உடுமலை என ஆறு வனச்சரகங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.



இந்த வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, கரடி, யானை, ராஜநாகம், பல்வேறு வகையான மான்கள் என பல உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்துக்குப் பிந்தைய, வன உயிரின கணக்கெடுப்பு பணி நடைபெறுவது வழக்கம். அவ்வாறு, இந்த ஆண்டு வன உயிரின கணக்கெடுக்கும் பணி இன்று துவங்கியது. கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது. 



இன்று காலை பொள்ளாச்சி கோட்டம் பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி ஆகிய நான்கு வனச்சரகளிலும், மாவட்ட வன அலுவலர் முன்னிலையில் கணக்கெடுப்பு தொடங்கியது. மொத்தம் நான்கு வனச்சரகங்களிலும் 62 நேர்கோட்டுப் பாதையில் கணக்கெடுப்புகள் துவங்கின. 

இதில் மாமிச உண்ணிகள், தாவர உண்ணிகள் மற்றும் பல்வேறு வகையான உயிரினங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுகின்றன. நேரில் பார்க்கும் வன உயிரினங்கள், வன உயிரினங்களின் கால்தடங்கள், எச்சம், நகக்கீறல்கள் போன்றவையும் கணக்கிடப்படுகின்றன. 

மேலும், வனப்பகுதிகளில் வன உயிரினங்களுக்கு ஏதாவது இடையூறுகள் உள்ளதா என்பது குறித்தும் கண்காணிக்கப்படும், என்றும், இன்று தொடங்கும் கணக்கெடுப்பு 21ஆம் தேதி வரை நடைபெறும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...