கோவை: சூலூரில் 6 மாதங்களுக்கு முன்பு சொகுசு காரை திருடிய வாலிபரைை, வாகன சோதனையில் போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவர் ஓட்டி வந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- சூலூரை அடுத்த காங்கயம்பாளையம் சோதனைச்சாவடியில், சப் இன்ஸ்பெக்டர் பாண்டியராஜ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சொகுசு கார் ஒன்று வேகமாக வந்தது. உடனே, அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர்.
ஆனால், அந்த கார் நிற்காமல் போலீசாரை முந்திச் செல்ல முயன்றது. உடனே, போலீசார் துரிதமாக செயல்பட்டு, சாலையின் குறுக்கே வாகனத்தை நிறுத்தி அந்த காரை மடக்கி பிடித்தனர். பின்னர், அந்த காரில் வந்த நபரிடம் ஏன் காரை நிறுத்தாமல் சென்றீர்கள்..? என்று கேட்டதற்கு பிரேக் பிடிக்கவில்லை என்று அவர் பதில் கூறியுள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த நபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினார். விசாரணையில், அந்த நபர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறியதால், அவர் மீது சந்தேகம் வலுத்ததால், அவரை சூலூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து கிடுக்கிப்பிடி விசாரணை செய்தனர்.
விசாரணையில், அவர் திண்டுக்கல் மாவட்டம் வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் ஜார்ஜ் குமார் (வயது 24), என்பதும் அவர் ஓட்டி வந்த கார் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சூலூர் பகுதியில் திருடு போனது என்பதும் தெரியவந்தது. மேலும், கோவை மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளில் ஜார்ஜ் குமார் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்ததை, தொடர்ந்து போலீசார் ஜார்ஜ் குமார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும், அவர் ஓட்டி வந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில், வேறு யாராவது ஈடுபட்டு உள்ளனரா? என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.