கோவை கோர்ட் தீர்ப்பு..! ஈமு கோழி பெயரில் கோடிக்கணக்கில் மோசடி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு 10 ஆண்டு சிறை

கோவை: ஈமு கோழி பெயரில் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்த வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோவை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு அளித்தது.


கோவை: ஈமு கோழி பெயரில் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்த வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோவை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சாஸ்திரி நகரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 33), இவருடைய மனைவி (ராதா 30), இவரது சகோதரர், கத்தேரி பகுதியைச் சேர்ந்த ராஜா (30), இவர்கள் மூன்று பேரும் கடந்த 2012 -ஆம் ஆண்டில் சேலத்தில் ஜெய் ஈமு கோழிப்பண்ணை நிறுவனம் நடத்தி வந்தனர். இந்தப் பண்ணை நிறுவனத்தின் சார்பில், ஈமு கோழி வளர்க்க செட் அமைத்து, தீவனம் மருத்துவச் செலவு செய்து தரப்படும் என்றும் மாதம் ரூபாய் 5 ஆயிரம் ஆண்டிற்கு ரூபாயிலிருந்து ரூபாய் 20,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தனர்.

கூடுதலாக, விஐபி திட்டத்தில் மாதம் ரூபாய் 7,000 ஆண்டுக்கு போனஸாக ரூபாய் 25,000 தரப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ஈமு கோழி வளர்க்க விரும்புவோர் ரூபாய் ஓரு லட்சத்து 50 ஆயிரம் டெபாசிட் செலுத்த வேண்டும், அதில் அவர்களுக்கு 6 ஈமு கோழி தரப்படும், பின்னர் இரண்டு ஆண்டில் டெபாசிட் செய்த தொகை திரும்ப வழங்கப்படும்், என ஈமு கோழிப்பண்ணை நிறுவனத்தினர் அறிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, சேலம், ஈரோடு உள்பட பல்வேறு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஈமு கோழி வளர்ப்பு திட்டத்தில் பணம் டெபாசிட் செய்தனர். இதில், 173 பேர் ரூபாய் 2 கோடியே 33 லட்சத்து 27 ஆயிரத்து 500 டெபாசிட் செய்திருந்தனர். இவர்களுக்கு உரிய தொகை வழங்கப்படவில்லை என புகார் எழுந்தது.

இது தொடர்பாக, சேலம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (42), என்பவர் கடந்த 2012-ஆம் ஆண்டு சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, இதில் தொடர்புடைய மூன்று பேரையும் கைது செய்தனர். பின்னர், அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கோவை டான்பிட் கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில், குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் தலா 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும், மூன்று பேருக்கும் ரூபாய் 1 கோடியே 29 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மூன்று பேரும் சேர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 1 கோடியே 28 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், என கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

இது போன்று, சேலத்தில் மற்றுமொரு நிறுவனமான அபி ஈமு கோழிப்பண்ணை மற்றும் அக்ரோ ஃபார்ம் நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கிலும் ரஞ்சித்குமார், ராஜா ஆகியோர் இருந்தனர். இவர்களுடன் ராஜாவின் மனைவி சசிகலா (30), இடம் பெற்றிருந்தார். இதில் ரூபாய் 5 கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 550 கோடி மோசடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட ரஞ்சித்குமார், ராஜா அவருடைய மனைவி சசிகலா ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 3 கோடியே 56 லட்சத்து 60 ஆயிரம் இழப்பீடு தர வேண்டும், ஒவ்வொரு நபரும் தலா ரூபாய் 1 கோடியே 12 லட்சத்து 20 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும், என நீதிபதி உத்தரவிட்டார்.

நேற்று ஒரே நாளில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த 2 வழக்குகளிலும் தண்டனை பெற்ற அவர்கள் ஏககாலத்தில் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். தண்டனை அறிவிக்கப்பட்ட சசிகலா நேற்று கோர்ட்டில் ஆஜராகவில்லை என்பதால் இவரை கைது செய்து சிறையில் அடைக்க பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...