பொள்ளாச்சி அருகே தொடர் திருட்டு, நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் 4 பேர் கைது - 13 சவரன் நகை மற்றும் ரூ.5 லட்சம் பணம் பறிமுதல்!

கோவை: பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு திருட்டு, நகை பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் கைது செய்த போலீசார் 13 சவரன் நகை ரூ.5 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.


கோவை: பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு திருட்டு, நகை பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் கைது செய்த போலீசார் 13 சவரன் நகை ரூ.5 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல மாதங்களாக தனியாக செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு மற்றும் வீடுகளில் கொள்ளையடிப்பது, இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் திருடுவது என தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

இச்சம்பவங்களில் ஈடுபட்டு வரும் கொள்ளையர்களை பிடிக்க கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருளரசு உத்தரவின் பேரில், பொள்ளாச்சி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையில், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில், கோட்டூர் ரோடு - வஞ்சியாபுரம் பிரிவில், கிழக்கு காவல் நிலைய போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தி சோதனையிட்ட போது, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். பின்னர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.



இதனையடுத்து, கோட்டூர் மலையாண்டிபட்டினத்தை சேர்ந்த சூரிய ஜெகதீஸ்(27), ரகுபதி(37), மல்லீஸ்வரன்(31), சபரிநாதன்(24) உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 13 சவரன் தங்க நகைகள், மூன்று இருசக்கர வாகனங்கள், ஒரு ஆம்னி கார் மற்றும் ரூ.5 லட்சத்து 10 ஆயிரம் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.



மேலும், 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...