கோவை ஆர்‌.எஸ்‌.புரம்‌ பகுதியில்‌ சாலையோரத்தில்‌ குப்பைகள்‌ கொட்டிய கடைகளுக்கு மாநகராட்சி ஆணைய‌ர் அபராதம்‌ விதித்து உத்தரவு!

கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌, ஆர்‌.எஸ்‌.புரம்‌ பகுதியில்‌ சாலையோரங்களில்‌ குப்பைகள்‌ கொட்டிய தனியார்‌ நிறுவனம்‌ மற்றும்‌ கடைகளுக்கு மாநகராட்சி ஆணைய‌ர் பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ அபராதம்‌ விதித்து உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌, ஆர்‌.எஸ்‌.புரம்‌ பகுதியில்‌ சாலையோரங்களில்‌ குப்பைகள்‌ கொட்டிய தனியார்‌ நிறுவனம்‌ மற்றும்‌ கடைகளுக்கு மாநகராட்சி ஆணைய‌ர் பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ அபராதம்‌ விதித்து உத்தரவிட்டார்.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.23 ஆர்‌.எஸ்‌.புரம்‌, டி.வி.சாமி சாலை பகுதியில்‌ உள்ள தனியார்‌ வணிக வளாகத்தில்‌ செயல்பட்டு வரும்‌ நிறுவனங்கள்‌ மற்றும்‌ கடைகள்‌ தங்களின்‌ குப்பைகளை மாநகராட்சியால்‌ வைக்கப்பட்டிருக்கும்‌ குப்பைத்‌ தொட்டியில்‌ போடாமல்‌ சாலையோரங்களில்‌ போடப்பட்டிருந்ததை மாநகராட்சி அதிகாரிகளால்‌ கண்டறியப்பட்டது.

அதனைத்‌ தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்களின்‌ உத்தரவின்படி, மேற்கு மண்டல சுகாதார அலுவலர்‌ மற்றும்‌ மாநகராட்சி அதிகாரிகள்‌ மேற்படி இடங்களை நேரில்‌ ஆய்வு செய்து, பொதுசுகாதாரத்திற்கு ஊறு விளைவிக்கும்‌ வகையில்‌ செயல்பட்ட ஒரு தனியார்‌ நிறுவனத்திற்கு ரூ.10,000/-ம்‌, மற்றும்‌ மூன்று கடைகளுக்கு தலா ஐந்தாயிரம்‌ வீதம்‌ ரூ.15,000/-ம்‌ ஆகமொத்தம்‌ ரூ.25,000/-ம்‌ அபராதம்‌ விதிக்கப்பட்டு, கடைகள்‌, வர்த்தக வணிக கட்டிடங்கள்‌ மற்றும்‌ அலுவலகங்களில்‌ சேகரமாகும்‌ குப்பைகளை சாலையோரங்களில்‌ கொட்டக்கூடாது என மாநகராட்சி சார்பில்‌ அறிவுறுத்தினார்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...