கோவை: கோவை சித்தாபுதூர் அருகே திருமணமான ஒரே வருடத்தில் புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆர்.டி.ஓ விசாரணை நடைபெற்று வருகிறது.

கோவை சித்தாபுதூர் அருகே உள்ள பி.கே.ஆர் வீதியைச் சேர்ந்தவர் ஸ்டாலின். இவரது மனைவி காயத்ரி (20). இவர்களுக்கு கடந்த வருடம் திருமணம் நடைபெற்ற நிலையில், 10 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், நேற்று வீட்டில் இருந்த காயத்ரி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர், தற்கொலை செய்து கொண்ட காயத்ரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காட்டூர் போலீசார் 174 சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான ஒரு வருடத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ விசாரணை நடைபெற்று வருகிறது.