ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் வனவிலங்கு கணக்கெடுப்புக்கான பயிற்சி முகாம்!

கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டத்தில், வனவிலங்கு கணக்கெடுப்புக்கான பயிற்சி முகாம் அட்டகட்டியில் நடைபெற்றது.


கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டத்தில், வனவிலங்கு கணக்கெடுப்புக்கான பயிற்சி முகாம் அட்டகட்டியில் நடைபெற்றது.

பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது ஆனைமலை புலிகள் காப்பகம். இதில் பொள்ளாச்சி வனக் கோட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, டாப்ஸ்லிப்(உலாந்தி) ஆகிய நான்கு வனச்சரகங்களில் ஆண்டுதோறும் கோடைக்காலம் மற்றும் குளிர்கால வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் வனத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டிற்கான குளிர்கால வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் நாளை முதல் 21ம் தேதி வரை நடக்க உள்ளது.



இதற்காக முதற்கட்ட பயிற்சி முகாம் இன்று பொள்ளாச்சி வால்பாறை ரோடு - அட்டகட்டி வனத்துறை பயிற்சி அரங்கில் நடைபெற்றது.



ஆனைமலை புலிகள் காப்பக பொள்ளாச்சி வனக் கோட்ட மாவட்ட வன அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியர் தலைமையில், நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட 4 வனச்சரகங்களைச் சேர்ந்த வனத்துறை ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து நாளை காலை முதல் நான்கு வனச்சரகங்களிலும் 62 நேர்கோட்டு பாதைகள் அமைத்து, வனத்துறை ஊழியர்கள் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...