ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்‌ கீழ்‌ கோவை‌ மாநகராட்சியில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தல்!

கோவை: ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்‌ கீழ்‌ கோவை‌ மாநகராட்சியில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப்பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்குமாறு அனைத்துதுறை அலுவலர்கள் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் கேட்டுக்கொண்டார்.

கோவை: ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்‌ கீழ்‌ கோவை‌ மாநகராட்சியில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப்பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்குமாறு அனைத்துதுறை அலுவலர்கள் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் கேட்டுக்கொண்டார்.



கோவை மாநகராட்சியில்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்‌ கீழ்‌ நடைபெற்று வரும்‌ பணிகள்‌ குறித்து அனைத்துதுறைசார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்‌ கூட்டம்‌ மாநகராட்சி ஆணையாளர் மற்றும்‌ தனிஅலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ தலைமையில்‌ இன்று (14.12.2020) நடைபெற்றது. மாநகராட்சி பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ நடைபெற்ற இந்தக் கூட்டத்தில்‌ சாலைகள்‌, பூங்காக்கள்‌, பாதாள சாக்கடைப் பணிகள்‌, குடிமராமத்துப் பணிகள் குறித்து பேசப்பட்டன.‌ 

ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்‌ கீழ்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ அதிநவீன சாலைகள்‌, பொழுதுபோக்கு பூங்காக்கள்‌, சிறுவர் பூங்காக்கள்‌, விளையாட்டுத்திடல்‌, தெருவிளக்குகள்‌, சாலையோர நடைபாதைகள்‌, மாதிரி சாலைகள்‌, மல்டி லெவல்‌ கார்‌ பார்க்கிங்‌ ஆகிய பணிகள்‌ நடைபெற்று வருகின்றன. மேலும் இத்திட்டத்தின்கீழ் கோவை‌ மாநகரின்‌ மையப்பகுதியில்‌ உள்ள உக்கடம்‌ பெரியகுளம்‌, வாலாங்குளம்‌, முத்தண்ணன்‌குளம்‌ போன்ற பல்வேறு குளங்கள்‌ புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. 

மாதிரி சாலைகள்‌அமைக்கப்பட்டு மின்சாரம்‌ மற்றும்‌ தொலைத்தொடா்பு வசதிகள்‌ போன்ற அனைத்து பயன்பாடுகளும்‌ நிலத்தடியில்‌ செல்லும்‌ வண்ணம்‌ வடிவமைக்கப்படுகிறது. நடைபாதை ஓரங்களில்‌ நவீன மின்விளக்கு வசதிகள்‌ செய்யப்படுகின்றன. உக்கடம்‌ பெரியகுளம்‌, வாலாங்குளம்‌, செல்வசிந்தாமணிக்‌ குளம்‌, கிருஷ்ணம்பதி குளம்‌, செல்வம்பதி, குமாரசாமி குளம்‌, சிங்காநல்லூர்‌ குளம்‌, குறிச்சி குளம்‌ ஆகிய குளங்களில்‌ பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.‌ கோவை மாநகராட்சியில்‌ 24 மணிநேரமும் குடிநீர் வழங்கும்‌ பணிகள் மற்றும் மல்டி லெவல்‌ கார்‌ பார்க்கிங்‌ கட்டப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தையும் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ அனைத்துப்‌ பணிகளையும் தொய்வின்றி விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம்‌ கேட்டுக்கொண்டார்‌.

கூட்டத்தில்‌ ஸ்மார்ட்‌ சிட்டி முதன்மை செயல்‌ அலுவலர்‌ மருத்துவர் என்‌.ராஜ்குமார், மாநகரப் பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌, செயற்பொறியாளர் பார்வதி, திட்ட மேலாண்மை ஆலோசகர் குழுத்தலைவர் ‌கோபாலகிருஷ்ணன்‌, அனைத்து மண்டல செயற்பொறியாளர்கள்‌, உதவி பொறியாளர்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...