வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி கோவையில் ரயில் மறியல்: மனிதநேய மக்கள் கட்சியினர் - போலீஸ் தள்ளுமுள்ளு!

கோவை: வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி கோவையில் மனிதநேய மக்கள் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அவர்களுக்கும் போலீசாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கோவை: வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி கோவையில் மனிதநேய மக்கள் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அவர்களுக்கும் போலீசாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



மத்திய அரசு சமீப காலத்தில் கொண்டு வந்த வேளாண்திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.



இந்நிலையில்,விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கோவையிலும் பல்வேறு கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மனிதநேய மக்கள் கட்சியினர் கோவை ரயில் நிலையம் முன்பு ரயில் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனிடையே, ரயில் நிலையத்தில் உள்ளே முயன்றவர்களை போலீசார் தடுத்த நிறுத்த முயன்ற போது கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 78 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...