ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மகனை யானை தாக்கிக் கொன்றதால் பந்தலூரில் இன்று முழு அடைப்புப் போராட்டம்..!

கூடலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்துள்ள கொளப்பள்ளி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரையும், அவரது மகனையும் யானை தாக்கிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூடலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்துள்ள கொளப்பள்ளி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரையும், அவரது மகனையும் யானை தாக்கிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 



இச்சம்பவத்தை, கண்டித்து இன்று பந்தலூர் தாலுகாவிற்குட்பட்ட ஊர்களில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுவதால், அங்கு கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது. 



கொளப்பள்ளி அரசு தேயிலைத் தேரட்டக் கழக முதல் சரகத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் (49), அவரது மகன் பிரசாந்த் (21) இருவரும் நேற்று நகரத்திற்கு வந்து பணிகளை முடத்துவிட்டு வீட்டுக்குச் செல்லும் வழியில் இருவரையும் யானை தாக்கிக் கென்றது. அதே பகுதியில், கடந்த 3 நாட்களில் மூன்று பேர் யானைத் தாக்குதலில் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த ஆட்கொல்லி யானையை பிடித்து, வளர்ப்பு முகாமுக்கு கொண்டு செல்ல வலியுறுத்தி முழு அடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டதிற்கு, அரசு தேயிலைத் தோட்டக் கழக தொழிலாளர்களும் முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல், இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இறந்த, ஆனந்தராஜ் அந்த பகுதி, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...