கோவையில், அடையாளம் தெரியாத வாலிபர் ரெயில் என்ஜினில் சிக்கி 3 கிலோ மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டு பலி..!

கோவை: கோவையில் வாலிபர் ஒருவர், ரெயில் என்ஜினில் சிக்கி 3 கிலோ மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்ட வாலிபர் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் வாலிபர் ஒருவர், ரெயில் என்ஜினில் சிக்கி 3 கிலோ மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்ட வாலிபர் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கவுகாத்தியில் இருந்து கோவை வழியாக திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மதியம் 12 மணி அளவில சிங்காநல்லூர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, நீலிகோணம்பாளையம் பக்கம் வரும்போது, ஒரு வாலிபர் ரயில் என்ஜினில் முன்பகுதியில் சிக்கினார். மோதிய வேகத்தில் பலியான அந்த வாலிபரின் வாய் பகுதியில் எஞ்சினின் முன்பு உள்ள கம்பி குத்தி இழுத்து செல்லப்பட்டார். 

அதை நேரில் பார்த்த மக்கள், அலறி சத்தம் போட்டனர். இதனால், ராமானுஜம் நகர் அருகே நடுவழியில் ரெயில் நிறுத்தப்பட்டது. இது குறித்து, கோவை ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், சப்-இன்ஸ்பெக்டர் ஏசு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று என்ஜின் கம்பியில் சிக்கி இருந்த அந்த வாலிபர் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தார். 

இதனால், அரை மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது. பலியான அந்த வாலிபருக்கு 25 வயது இருக்கும், மாநிறம் உடையவர் சிமெண்ட் கலரில் கருப்பு புள்ளி போட்ட முழுக்கை சட்டையும், நீல கலரில் பேண்டும் அணிந்து உள்ளார். 

இறந்த அந்த வாலிபர் யார்? தண்டவாளத்தைக் கடக்கும்போது ரெயலில் அடிபட்டு இறந்தாரா?அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...