கோவையில் மைனர் பெண்ணை கடத்தி திருமணம் நாடகம் ஆடிய காதலனின் தாய்-தந்தை போக்சோவில் கைது

கோவை: கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த 17 வயதான கல்லூரி மாணவியை, ஆசை காட்டி திருமணம் செய்த வாலிபரை போலீஸார் தேடி வருகின்றனர். 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்ணை திருமணம் செய்த குற்றத்துக்காக, அந்த வாலிபர் மீதும், அப்பெண்ணை வீட்டில் மறைத்து வைத்து நாடகம் ஆடிய குற்றத்திற்காக அவரது பெற்றோரை மீது, போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவை: கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த 17 வயதான கல்லூரி மாணவியை, ஆசை காட்டி திருமணம் செய்த வாலிபரை போலீஸார் தேடி வருகின்றனர். 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்ணை திருமணம் செய்த குற்றத்துக்காக, அந்த வாலிபர் மீதும், அப்பெண்ணை வீட்டில் மறைத்து வைத்து நாடகம் ஆடிய குற்றத்திற்காக அவரது பெற்றோரை மீது, போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வெள்ளலூர் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய கல்லூரி மாணவிக்கும், பீளமேடு புதூர் பகுதியைச் சேர்ந்த சி.என்.சி ஆப்பரேட்டர் சரவணன் (23), என்பவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில், மாணவியிடம் செல்போன் எண் வாங்கி சரவணன் அடிக்கடி பேசி வந்துள்ளார். கொரோனா ஊரடங்கின் போது, சரவணன், அந்த மாணவியிடம் தான் அவரை காதலிப்பதாகவும், மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். 

இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் யாருக்கும் தெரியாமல், சரவணன், அந்த மாணவியை மதுரைக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார். பின்னர், இருவரும் பீளமேடு புதூரில் உள்ள சரவணனின் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். 

இந்த நிலையில், மகளை காணாமல் தவித்த பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். விசாரணையில், சமீபத்தில் தான் மாணவிக்கு திருமணமாகி, பீளமேடு புதூரில் வசிப்பதாக தெரிய வந்துள்ளது. பின்னர், இந்த வழக்கு கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. 

விசாரணைக்காக, சரவணனின் வீட்டிற்குச் சென்ற போது, சரவணனின் தாய், தந்தை ஆகியோர் மாணவியை வீட்டுக்குள் மறைத்து வைத்துக்கொண்டு, வீட்டில் யாரும் இல்லை, எங்கள் மகனுக்கு திருமணம் நடக்கவில்லை என கூறி நாடகமாடியது தெரியவந்துள்ளது. 

அவர்கள் பேச்சில், சந்தேகம் அடைந்த போலீசார், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, மாணவியை அறைக்குள் வைத்து பூட்டி வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர், மாணவியை மீட்டு பெற்றோர் வசம் ஒப்படைத்தனர். 

திருமணத்தை மறைத்து, மாணவியை வீட்டில் மறைத்து வைத்திருந்த சரவணன், மற்றும் அவரது தந்தை, சுப்பிரமணியம் (55), தாய் பொன்னி (48), ஆகியோர் 

மீது (சிறார் பாலியல் அத்துமீறல்) போக்சோ சட்டம் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சரவணனை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...