கோவையில் தன்னை ஜாதியைக் கூறி இழிவு செய்ததாக அ.தி.மு.க பெண் ஊராட்சி தலைவர் பரபரப்பு புகார்

கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் தேவராயபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சுந்தரி. இவர், தாழ்த்தப்பட்ட காட்டுநாயக்கர் என்று சொல்லப்படும் சாமக்கோடாங்கி சமுதாயத்தைச் சேர்ந்தவர்.



கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் தேவராயபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சுந்தரி. இவர், தாழ்த்தப்பட்ட காட்டுநாயக்கர் என்று சொல்லப்படும் சாமக்கோடாங்கி சமுதாயத்தைச் சேர்ந்தவர்.



அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், தேவராயபுரம் ஊராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்று ஊராட்சி தலைவர் ஆனார். இவருக்கு, இந்த ஊராட்சியில் துணைத் தலைவராக உள்ள அதிமுகவைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் வேலையில்

ஒத்துழைப்புதராமல், ஜாதி ரீதியான இழிவுப்படுத்தி வருவதாகவும் குற்றம் தெரிவித்துள்ளார். மேலும், நான் சொல்வதை தான் கேட்க வேண்டும் என்று தன்னை மிரட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால், வேதனையடைந்த ஊராட்சி மன்ற தலைவர், சுந்தரி இது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் பலமுறை புகார் செய்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று நிருபர்களை சந்தித்த ஊராட்சி மன்றத்தலைவர் சுந்தரி கூறுகையில்:- கோவை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து துணைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மனு கொடுத்துள்ளேன். என் மனு மீதுு, நடவடிக்கை எடுக்காவிட்டால் எனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன் என கண்ணீர் மல்க கூறினார்.

ஊராட்சி தலைவரான, சுந்தரி ராஜினாமா செய்ய உள்ளதாக வெளிவந்த செய்தி, அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...