கோவையில் மாணவர் உட்பட 2 பேர் தற்கொலை

கோவை: கோவையில் நேற்று வெவ்வேறு சம்பவங்களில் மாணவர் உட்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து சம்பந்தபட்ட காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவையில் நேற்று வெவ்வேறு சம்பவங்களில் மாணவர் உட்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து சம்பந்தபட்ட காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவை பீளமேடு, சேரன் மாநகர் சேர்ந்த மாணிக்கம் என்பவர் மகன் அரவிந்த் சுப்பையா (19), கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம், இவரது தாய் மற்றும் சகோதரி ஆகியோர் ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளனர், அப்போது, வீட்டில் தனியே இருந்த அரவிந்த் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சமீபமாக, படிப்பில் கவனம் செலுத்தாமல் கடந்த ஒரு மாதமாக கடும் மன உளைச்சலில் அவர் இருந்து வந்ததாக தெரிகிறது.

இதுதொடர்பாக போலீசார் 174 சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

இதேபோல், செல்வபுரம் எல். ஐ. சி காலனி சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் உதயகுமார் (37), நகை பட்டறை உரிமையாளர். இவர், சில மாதங்களாக போதிய வருமானம் இல்லாததால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு கஷ்டபட்டு வந்துள்ளார். இதனால், கடன் கட்ட முடியாமல் தவித்த இவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து, செல்வபுரம் போலீசார் 174 சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...