கோவை அருகே மது போதையில் இருந்த நபர் மீது வாகனம் மோதி உயிரிழப்பு..!

கோவை: கோவை கண்ணம்பாளையம் பகுதியில் கூலித்தொழிலாளி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவை கண்ணம்பாளையம் பகுதியில் கூலித்தொழிலாளி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூலூரை அடுத்த கண்ணம்பாளையம் பிரிவு அருகே நேற்று 55, வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக சூலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். இதில், சடலமாக கிடந்த அவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் 55 என்பதும் இவர் கட்டிட வேலைக்கு சென்று வந்ததும் தெரியவந்தது.

விசாரணையில் நேற்று முன்தினம், ஆறுமுகம் அவரது நண்பர்களுடன் சேர்ந்து அதே பகுதியில் மது அருந்தியதாகவும், மது போதையில் நண்பர்கள் அவரை அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளனர். அப்போது, அந்த பகுதியில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் இறந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக, சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து சூலூர் போலீசார், விசாரணை நடத்தியதில் வாகனம் மோதியது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது இறப்பு, விபத்து என வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்படி உயிர் இழப்பு ஏற்படுத்திய வாகனம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...