புதிய வாக்காளர்களின் வாக்கு அதிமுகவிற்கு கிடைக்கும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

தமிழக அரசின் சிறப்பான செயல்பாடுகளால் புதிய வாக்காளர்கள் ஆர்வமாக தங்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ள வருவதாக, பல்லடம் தொகுதியில் வாக்காளர் சிறப்பு முகாமை ஆய்வு செய்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் சிறப்பான செயல்பாடுகளால் புதிய வாக்காளர்கள் ஆர்வமாக தங்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ள வருவதாக, பல்லடம் தொகுதியில் வாக்காளர் சிறப்பு முகாமை ஆய்வு செய்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 



வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்கள் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்வதற்கான, வாக்காளர் சிறப்பு முகாம் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில்், திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு முகாமை கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.



பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் , தமிழக அரசின் சிறப்பான செயல்பாடுகளால் புதிய வாக்காளர்கள் தங்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ள ஆர்வமாக வருவதாகவும் , எந்த மாநிலமும் செய்யாத பல புதிய முயற்சிகளை நம் தமிழக முதல்வர் செய்து வருவதாக தெரிவித்தார். 

குறிப்பாக, நீட் தேர்வில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு காரணமாக, ஏராளமான ஏழை எளிய மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில உதவி மேற்கொண்டுள்ளதாகவும் , இதன் மூலம் புதிய வாக்காளர்களின் வாக்கு அதிமுகவிற்கு கிடைக்கும் எனவும் தமிழக மக்களுக்கு செய்த நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்றதால் தான் மக்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை இருப்பதாகவும் பேட்டி அளித்தார். 

இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் உடைய அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...