மக்களுக்காக சேவை செய்த சாந்தி கியர்ஸ் அறங்காவலரின் இறுதி சடங்கில் நெகிழ்ச்சி சம்பவம்..!

கோவை: நாம் செய்யும் தான தர்மங்களை விளம்பரப்படுத்த கூடாது என்பதை குறிக்கும் வகையில் நாம் முன்னோர்கள் சொல்லி வைத்த ஒரு பழமொழி தான் "இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரியக்கூடாது" என்பது. அந்த வாக்கிற்கு இணங்க வாழ்ந்து காட்டியவர் கோவை சாந்தி சோஷியல் சர்வீஸ் அமைப்பின் அறங்காவலர் சுப்பிரமணியம் (78).



கோவை: நாம் செய்யும் தான தர்மங்களை விளம்பரப்படுத்த கூடாது என்பதை குறிக்கும் வகையில் நாம் முன்னோர்கள் சொல்லி வைத்த ஒரு பழமொழி தான் "இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரியக்கூடாது" என்பது. அந்த வாக்கிற்கு இணங்க வாழ்ந்து காட்டியவர் கோவை சாந்தி சோஷியல் சர்வீஸ் அமைப்பின் அறங்காவலர் சுப்பிரமணியம் (78).

மனதார செய்யும் மக்கள் சேவைக்கு விளம்பரம் எதற்கு என்று, ஊடகங்களில்முகத்தை காட்டுவதில்லை என்று இறுதி வரை உறுதியாக இருந்தவர் அவர். கடந்த சில தினங்களாக, உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை 5.30 மணிக்கு உயிரிழந்தார். 

கோவையில் சாந்தி கியர்ஸ் என்ற நிறுவனத்தை 1972 -ல் துவங்கி. இயந்திர உதிரி பாகங்களை பல்வேறு நாடுகளுக்கு தயாரித்து கொடுத்து வேகமாக வளர்ச்சி அடைந் தார். 1996-ம் ஆண்டு சாந்தி சோஷியல் சர்வீஸ் என்ற அமைப்பினை சுப்பிரமணியம் துவக்கினார். இந்த அமைப்பின் அறங்காவலராக சுப்ரமணியம் இருந்து வருகிறார். சாந்தி கியர்ஸ் நிறுவனம் சமீபத்தில் வேறு நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. சாந்தி சோஷியல் சர்வீஸ் பணிகளை மட்டும் சுப்பிரமணியம் கவனித்து வந்தார். 

இறந்த பின்னும் எளிமை..! 

நேற்று மாலை, தன்னுடைய மகளிடம் நான் இறந்தவுடன், இறப்புச்செய்தி என்னுடைய பணியாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் தெரிய வேண்டாம். மிகவும் எளிமையான முறையில் என்னை தகனம் செய்யவும், என்னுடைய இறப்பு நிகழ்ச்சியில் ஊர்வலத்தில் யாரும் கலந்து கொள்ள வேண்டாம், என உறுதியாக கூறிருக்கிறார். 

இறுதி சடங்கில் நெகிழ்ச்சி..! 

அதன்படி, சாந்தி சோஷியல் சர்வீஸ் அமைப்பால் நடத்தப்படும் இலவச மின் மயானத்தில் அவரது இறுதி சடங்கு செய்ய திட்டமிடப்பட்டது. மேலும், அவரின் விருப்பம்படி, நெருங்கிய உறவினர்கள் தவிர வேறு யாருக்கும் அவர் இறந்த தகவல் தெரிவிக்கப்படவில்லை. 

அப்போது, கடைசியாக மின்மயானத்தில் தகனம் செய்ய செல்லும் போது, அங்குள்ள மின் மயான பணியாளர்கள் 4 பேர், அந்த வாகனத்திற்கு பின்னால் சென்று உடலை தகனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். பின்னர், தகனம் செய்து முடித்த பின்னர் தான் இறந்தது, நம்முடைய முதலாளி என்பதே, அவர்களுக்குத் தெரியவந்துள்ளது. 

இறக்கும் வரை ஊடகங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் முகத்தை காட்டாமல் இருந்த அவர், இறந்த பின்பும் அதை நிரூபித்துக் காட்டியுள்ளார். முகம் காட்டாவிட்டாலும், அவரின் தன்னலமற்ற சேவைகள் மூலம் கோவை மக்களின் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார், என்பதில் ஐயமில்லை. 

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...