திருப்பூர்: மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி பிரதமர் மோடி, தொழிலதிபர்கள் அம்பானி மற்றும் அதானி உருவப்பொம்மைகளை எரிக்க முயற்சித்த விவசாய சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்: மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி பிரதமர் மோடி, தொழிலதிபர்கள் அம்பானி மற்றும் அதானி உருவப்பொம்மைகளை எரிக்க முயன்ற விவசாய சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் 9வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே விவசாய சங்கத்தினர் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது விவசாய சங்கத்தினர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தொழிலதிபர்கள் அம்பானி, அதானி ஆகியோரின் உருவப்படங்களை கிழித்தும் உருவபொம்மையை எரிக்கவும் முயற்சி செய்தனர்.

இதனையடுத்து, காவல்துறையினர் விவசாய சங்கத்தினர் கைது செய்தனர். இச்சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.