பொள்ளாச்சி மற்றும் ஆனைமலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு..!

பொள்ளாச்சி; தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நான்காவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று, பொள்ளாச்சி நகரில் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பொள்ளாச்சி: தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நான்காவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று, பொள்ளாச்சி நகரில் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 



இன்று காலை 8:30 மணிக்கு பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில், தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து, பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் அருகே கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், அதிமுக நகர செயலாளருமான கிருஷ்ணகுமார் தலைமையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

அப்போது, அங்கு கூடியிருந்த அதிமுகவினர், கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் அஇதிமுக வெற்றி பெறுவதற்கு, உறுதிமொழி எடுத்தனர். இந்த நிகழ்ச்சியில், அண்ணா தொழிற்சங்க கோவை மாவட்ட செயலாளர் குருசாமி, கோவை தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் ஜேம்ஸ்ராஜா, பொள்ளாச்சி நகர மாணவரணி செயலாளர் அருளானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 



இதே போல, ஆனைமலை முக்கோணம் பகுதியில், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், கோவை தெற்கு மாவட்ட இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளர் சாந்தலிங்ககுமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...