மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 4ம் ஆண்டு நினைவு, திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுகவினர் மவுன ஊர்வலம்..!

திருப்பூர்: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 4ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுகவினர் மவுன ஊர்வலம் நடத்தினர். இதில், 500க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பூர்: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 4ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுகவினர் மவுன ஊர்வலம் நடத்தினர். இதில், 500க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



தமிழகத்தின் மறைந்த முதல்வரும், கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளருமான, ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. 

அதன்படி, திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக சார்பில் சட்டபேரவை துனைதலைவரும் திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் மற்றும் துணை சபாநாயகர், பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் அமைதி ஊர்வலம் நடத்தினர். 



தொடர்ந்து, அதிமுகவின் வெற்றிக்கு அனைவரும் பாடுபடுவோம் என்று உறுதி மொழியை மேற்கொண்டும் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தினர். திருப்பூர் குமரன் சிலையில் தொடங்கிய இந்த அமைதி ஊர்வலம் மாநகராட்சி வரை நடைபெற்றது. 

இந்த நிகழ்வில், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர், குணசேகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசாமி, மண்டலத் தலைவர் ஜான், ராதாகிருஷ்ணன், கருணாகரன் மற்றும் அதிமுக கட்சித் தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...