கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஓடந்துறை பிரிவில், வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரியும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி பங்கேற்றார். ஆர்ப்பாட்டத்தின் போது வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி முழக்கங்கள் எழுப்பபட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில், கலந்து கொண்ட திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கூட்டத்தினர் மத்தியில் பேசுகையில், மத்திய பா.ஜ.க ஆட்சி மெஜாரிட்டி இருப்பதன், ஓரே காரணத்திற்காக விவசாயிகளை அழைத்து பேசாமல், அவர்களின் போராட்டத்தை கண்டு கொள்ளாமல் விவசாய விரோத சட்டங்களை இயற்றியுள்ளது, என குற்றம்சாட்டினார்.
மக்களவை மாநிலங்களவையில் எல்லா கட்சிகளும் எதிர்த்த நிலையில், யாரும் வரவேற்காத இந்த சட்டத்தை அவசர அவசரமாக பா.ஜ.க அரசு நிறைவேற்றி இருக்கின்றது, என்றார். நாட்டிலேயே இச்சட்டங்களை வரவேற்ற ஒரே தலைவர், தன்னை விவசாயி என கூறிக்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மட்டும்தான் எனவும் இந்த சட்டத்தை சிறப்பான சட்டங்கள் என வரவேற்றுள்ளார் எனவும் குற்றம் சாட்டினார்.

மேலும் அவர் பேசுகையில், இது விவசாயிகளுக்கு செய்யும் பெரிய துரோகம் என கூறிய எம்.பி கனிமொழி, ஜெயலலிதா காலில் விழுந்து அமைச்சர் பதிவியும், சசிகலா காலில் விழுந்து முதலைமைச்சர் பதவியும், தற்போது முதல்வர் பதவி நீடிக்க பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா காலில் விழுந்து தன் பதவியை காப்பாற்றி வருகிறார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, என்று தெரிவித்தார்.
தற்போது நடைபெற்று வரும் ஆட்சி, ஜனநாயகத்திற்கு விரோதமாக நடைபெறும் ஆட்சி எனவும் இந்த 3 வேளாண் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால் விவசாயிகளுக்கு ஆதார விலை கிடைக்காத நிலை ஏற்படும் என்றார்.
அரசு கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கை விவசாயிகளுக்கு இல்லாமல் போகும் என்று தெரிவித்தவர் விவசாயிகள் கார்ப்பரேட்டுகளுடன் ஒப்பந்தம் போடலாம் என்கின்றனர், ஆனால் இதற்கு முன்னர் போடப்பட்ட ஒப்பந்தங்கள் மோசமான அனுபவத்தை தான் அவர்களுக்கு கொடுத்துள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
மேலும், கார்ப்பரேட் நிறுவனங்கள் வட இந்திய விவசாயிகளிடம் உருளை கிழங்கை கொள்முதல் செய்வதாக சொன்னார்கள், ஆனால் விளைவித்த பின்னர் அவை தரமில்லை என கூறி கார்ப்பரேட் நிறுவனத்தினர் வாங்க மறுத்தனர் எனவும் தெரிவித்தார். மேலும், ஒப்பந்தத்தை கார்ப்பரேட் நிறுவனம் மீறினால், விவசாயினால் வழக்கை நடத்த முடியாது எனவும் விவசாயி கார்ப்பரேட் நிறுவனங்களுடன் சண்டையிட முடியாது, என தெரிவித்த அவர், இந்தியாவில் விவசாயிகள் எந்த பயிரை விளைவிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதை கார்ப்பரேட்டுகளிடம் விடவேண்டிய நிலை மிகவும் மோசமானது, என்று தெரிவித்தார்.
உணவு பாதுகாப்பு மட்டுமே நாட்டுக்கு முக்கியமானது எனவும் வெங்காயம், பருப்பு, எண்ணெய், விதைகள் போன்றவை பாதுகாக்கப்பட வேண்டிய உணவு கிடையாது என்கின்றது இந்த வேளாண் சட்டங்கள் என்று தெரிவித்தார். விவசாயம் சந்தை என்பது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது, ஆனால் மாநில அரசின் உரிமையில் தலையிடும் வகையில் மத்திய அரசு தலையிட்டு இருக்கின்றது. இதை தட்டி கேட்க திறன் இல்லாமல் இருக்கின்றது, தமிழ் நாட்டில் உள்ள அதிமுக அரசு எனவும் கனிமொழி குற்றம்சாட்டினார்.
எனவே, இந்த மூன்று வேளாண் சட்டங்கள் தூக்கி எறியப்படும் வரை திமுக தொடர்ந்து போராடும் எனவும் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தெரிவித்தார்.