திருப்பூர்: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூரில் மாட்டு வண்டியுடன் காய்கறி மாலை அணிந்து கருஞ்சட்டை போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவளித்துு, திருப்பூர் ரயில் நிலையம் அருகே திமுகவினர் மற்றும் அதன் தோழமைக் கட்சியினர் கருப்புக் கொடி ஏந்தி கருஞ்சட்டை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, விவசாயிகளை மத்திய அரசு நசுக்கி வருவதாக குற்றம்சாட்டி, மாட்டு வண்டியுடன் காய்கறி மாலை அணிந்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வரை தங்களை கைது செய்து வைத்திருக்க வேண்டும் எனவும், இல்லை என்றால் தங்களை கைது செய்யக்கூடாது, என சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.