பொள்ளாச்சி: வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக பொள்ளாச்சியில் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட விவசாய சங்கங்கள் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது, காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், பரபரப்பு நிலவியது. அதனையடுத்து, 100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசு இயற்றியுள்ள வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகள் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைநகர் டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதை, கண்டித்தும், வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் பொள்ளாச்சி தலைமை தொலைபேசி நிலையம் முன்பு வால்பாறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம்(கம்யூனிஸ்ட்) தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

"வேளாண் சட்டத் திருத்த மசோதாவில் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என்று முதலமைச்சர் கூறி வருகிறார். மேலும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த வேளாண் சட்ட திருத்த மசோதா விவசாயிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். உற்பத்தி செய்யப்பட்ட விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காது, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு லாபம் ஈட்டும் வகையில் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. எனவே, இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்", என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

அப்போது, மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு, பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காவல்துறையினர் அவர்களை கைது செய்ய முற்பட்ட போது டிஎஸ்பி சிவகுமார் உள்ளிட்ட காவல் துறையினர் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.