கோவை: கோவையில் மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை கோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்தது.

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் வயது (38), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சூரிய பிரபா (32), இவருக்கு சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் ஆகும். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
கடந்த ஆண்டு வேல்முருகன் தனது குடும்பத்துடன் கோவை வந்து கவுண்டம்பாளையம் என். எஸ். ஆர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். ஆனால், அவருக்கு போதிய வருமானம் கிடைக்காததால் வேல்முருகன் தனது இரண்டு குழந்தைகளையும் அங்குள்ள ஒரு ஆசிரமத்தில் சேர்த்து படிக்க வைத்தார். இதற்கிடையே, வேல்முருகனுக்கு அவருடைய மனைவி சூரிய பிரபா வுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் தேதி கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது, ஆத்திரமடைந்த வேல்முருகன் வீட்டில் கிடந்த கேபிள் ஒயரில் சூரிய பிரபாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.
இது குறித்த, புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே, கொலை நடந்த 10 நாட்கள் கழித்து மதுரை ஜெ.எம் இரண்டாவது கோர்ட்டில் வேல்முருகன் சரணடைந்தார். அவரை, பெநா.பாளையம் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. மொத்தமாக, 18 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில், கழுத்தை இறுக்கி மனைவியை கொன்ற வேல்முருகனுக்கு ஆயுள் தண்டனையும் ரூபாய் ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி குணசேகரன் பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் நாகராஜ் வாதாடினார்.