கோவை: மத்திய அரசு இயற்றியுள்ள மூன்று வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை, கண்டித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டதில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
கோவை: மத்திய அரசு இயற்றியுள்ள மூன்று வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை, கண்டித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டதில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து திமுக கட்சி இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் திமுக மகளிர் அணி செயலாளர், கனிமொழி கோவை அடுத்த மேட்டுபாளையம் பகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உள்ளார். மற்றும், புறநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் 400க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் விவசாய 3 சட்ட மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும் என்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

குறைந்தபட்ச ஆதார விலையை கொடுக்காமல் விவசாயிகள் வாழ்வை கேள்விக் குறி ஆக்காதே..! மேலும், விவசாயிகள் வயிற்றில் அடித்து பெரு நிறுவனங்களை வளர்க்காதே..! போன்ற கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
