கோவை: கோவை மாவட்டத்தில் வேகமாக பரவி வந்த கொரோனா தொற்று தற்போது மெல்ல மெல்ல குறைய துவங்கியுள்ளது.
கோவை: கோவை மாவட்டத்தில் வேகமாக பரவி வந்த கொரோனா தொற்று தற்போது மெல்ல மெல்ல குறைய துவங்கியுள்ளது.
இதனிடையே, மேலும் கோவையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜாமணி கூறுகையில், கோவை ஊரக பகுதியில் நரசிம்மநாயக்கன்பாளையம் தவிர பிற பகுதிகளில் கொரோனா தொற்று பெருமளவு கட்டுக்குள் உள்ளது. ஒரு சில இடங்களில் மட்டும் சொற்ப எண்ணிக்கையில் கொரோனா தொற்று ஏற்படுகிறது.
ஆனால், கோவை மாநகராட்சியில் உள்ள போத்தனூர், ராமநாதபுரம், ஒண்டிபுதூர், பீளமேடு, சரவணம்பட்டி, கணபதி, சவுரிபாளையம், செல்வபுரம், காளபட்டி, சிங்காநல்லூர் ஆகிய 10 இடங்களில் கொரோனா தொற்று சற்று அதிகரித்து காணப்படுகிறது. அதனால், இந்த 10 இடங்களையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றோம். மேற்கண்ட, பகுதிகளில் தொற்று உறுதி செய்யப்பட்ட ஒரு குடும்பத்தில் 5 முதல் 9 பேருக்கு வரை கொரோனா தொற்று காணப்படுகிறது. பிற பகுதிகளில், இந்த அளவிற்கு தொற்று இல்லை.
எனவே, இந்த பகுதிகளை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். கோவை மாவட்டத்தில் தற்போது 13 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. இதில் 12 பகுதிகள் கோவை மாநகராட்சியில் உள்ளது. ஊரக பகுதியில் நரசிம்மநாயக்கன்பாளையம் மட்டும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக உள்ளது.
கொரோனா தொற்று குறைந்து வந்த போதிலும் தினமும் 4 ஆயிரம் முதல் 4,500 வரை கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகிறது. இதில் 3.4 சதவீதம் அளவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் தற்போது இறப்பு விகிதம் 1.25 சதவீதமாக உள்ளது. இதனை ஒரு சதவீதத்திற்கு கீழேயும், தொற்று எண்ணிக்கையை 100 எண்ணிக்கைக்கு கீழேயும் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மேலும், கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், முககவசம் அணியாத நபர்களுக்கு தொடர்ந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தொற்று உறுதி செய்யப்படவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை. கொரோனா தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.