கோவையில் போலி ரசீது தயாரித்து பொருட்களை விற்பனை செய்து 75 லட்சம் மோசடி. மேலாளர் கைது

கோவை: கோவையில் வேலை பார்த்த நிறுவனத்தின் பெயரில் போலியான ரசீது தயார் செய்து, பொருட்களை விற்பனை செய்து 75 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்ட நபர் கைது.

கோவை: கோவையில் வேலை பார்த்த நிறுவனத்தின் பெயரில் போலியான ரசீது தயார் செய்து, பொருட்களை விற்பனை செய்து 75 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்ட நபர் கைது. 

கோவை ஆர்.எஸ் புரத்தில் வசிப்பவர் செந்தில்குமார் அவர் பியூர் இந்தியா என்ற பெயரில் தண்ணீர் சுத்திகரிப்பு உதிரிபாகங்கள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். அத்துடன் காட்டன் இந்தியா என்ற பெயரில் ஆண்களுக்கான துணி கடை நடத்தி வருகிறார். 

அவர் நிறுவனத்தில், கோவை துடியலூர் அப்பநாயக்கன் பாளையம் பகுதியில் வசிக்கக்கூடிய வீரப்பெருமாள் (42), என்பவர் பல வருடங்களாக மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், வீரப்பெருமாள், அக்வா பியூர் என்ற பெயரில் தன்னுடைய முகவரியை பதிவு செய்து போலியான ரசீதை உருவாக்கி கடையில் உள்ள பொருட்களை விற்பனை செய்து 75 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து செந்தில்குமார் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதன்படி, கோவை மாநகர கமிஷனர் சுமித் சரண் உத்தரவின்பேரில் குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து வீர பெருமாளை தேடிவந்தனர். 

இந்த நிலையில், நேற்று சாய்பாபா காலனி அலுவலகத்தில் வீரப்பெருமாள் இருப்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் அலுவலகத்தை சுற்றி வளைத்து வீரப்பெருமாளை கைது செய்தனர். பிறகு, மோசடி வழக்கு பதிவு செய்து குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 7 நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...