பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்துள்ள மெட்டுவாவி கிராமத்தில் மனைவி இறந்த துக்கத்தில், கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு உடல்களையும் கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள மெட்டுவாவி கிராமத்தில் கோத்தகிரியை சேர்ந்த தர்மராஜ் (27);என்பவர் குடும்பத்துடன் தங்கி விவசாயம் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், சில தினங்களாக தர்மராஜின் மனைவி ரம்யாவிற்கு (25) உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மோசமடைந்த அவர் நேற்று இரவு உயிரிழந்தார். மனைவி இறந்த துக்கம் தாளாமல், தர்மராஜ், அதே இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவ இடத்திற்கு வந்த நெகமம் காவல் நிலைய போலீசார், இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.