பொள்ளாச்சியில் 80 வயதுடைய மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 34 வயதுடைய நபரை போலீஸார் தேடல்..!

பொள்ளாச்சி: கோவையை அடுத்த பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளான சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதே, பொள்ளாச்சியில் 80 வயது மூதாட்டியின் வாயில் துணியை திணித்து, அவரை 34 வயதுடைய வாலிபர் கற்பழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி: கோவையை அடுத்த பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளான சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதே, பொள்ளாச்சியில் 80 வயது மூதாட்டியின் வாயில் துணியை திணித்து, அவரை 34 வயதுடைய வாலிபர் கற்பழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 80 வயது மூதாட்டி நேற்று மாலை தோட்டத்தில் தென்னை மட்டையில் இருந்து சீமார் தயாரிக்க ஓலையைப் கிழித்து கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி (34), என்பவர் அங்கு வந்து, வேலை செய்து கொண்டிருந்த மூதாட்டியின் வாயில் துணியை வைத்து திணித்தார். மூதாட்டி போராடியும் அவரை வெள்ளியங்கிரி பலாத்காரம் செய்தார். அதன் பிறகு, அங்கிருந்து தப்பிவிட்டார். 

வாயில் துணியை எடுத்துவிட்டு மூதாட்டி அலறி சத்தம் போட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து விவரத்தைக் கேட்ட போது அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, மூதாட்டி கோமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து வெள்ளியங்கிரியை தேடி வருகிறார்கள். 

அதிர்ச்சியில் உள்ள அந்த மூதாட்டிக்கு பிள்ளைகள் உள்ளனர், அவருடைய மூத்த மகனுக்கு 60 வயது ஆகிறது. இந்நிலையில், காம வெறி பிடித்த வெள்ளியங்கிரியை உடனே கைது செய்து உரிய தண்டனை வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...