கோவை: கோவையில் இரு வேரு சம்பவங்களில் இரு வாலிபர்கள் காதல் தோல்வியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஒடிசா மாநிலம் பீமா வீ மாகண்டிகஞ்சும் பகுதியைச் சேர்ந்தவர் சிக்கந்தர் பய்க் (வயது 22). இவர் தனது அண்ணன் அதிகண்டா பய்க்டயுடன், கோவை மலுமிச்சம்பட்டி வடக்கு தோட்டப் பகுதியில் தங்கி 4 ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
சிக்கந்தர் பய்க் ஒடிசாவில் உள்ள தனது உறவினர் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. அவர் தினமும் பணி முடிந்து வந்த அந்த பெண்ணிடம் செல்போனில் நீண்ட நேரம் பேசி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது, என தெரிந்து. இதனால் மனவேதனையுடன் இருந்து வந்த அவர், நேற்று வழக்கம் போல வேலைக்கு செல்ல தயாரானார். அவரது அண்ணன் அதிகண்ட பய்க் குளிப்பதற்காக வெளியே சென்ற போது, சிக்கந்தர் படுக்கை அறையில் இருந்த துண்டால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து செட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீஸார் 174 சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், கோவை பி.பி வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (25), கார்பென்டர். இவரும் திருப்பூரைச் சேர்ந்த ஒரு பெண்ணும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால், அந்த பெண் மணிகண்டனிடம் பேச மறுத்து தனது காதலை முறித்துக் கொள்வதாக கூறியுள்ளார். இதனால், விரக்தி அடைந்த மணிகண்டன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக, பெரிய கடைவீதி போலீசார் 174 ஆவது சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.