ஜனவரியில் கட்சி தொடக்கம்: கோவையில் ரசிகர்கள், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..!

கோவை: நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரியில் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளதை அடுத்து, கோவையில் உள்ள அவரது ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



கோவை: நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரியில் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளதை அடுத்து, கோவையில் உள்ள அவரது ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 



கடந்த 2017 டிசம்பரில் நடிகர் ரஜினிகாந்த், 'நான் அரசியலுக்கு வருவது உறுதி' என அறிவித்தார். ஆனால், அதன்பின்னர் கட்சி நடவடிக்கைகளில் ஏதும் இறங்கவில்லை. கடந்த மக்களவைத் தேர்தலிலும் மவுனம் காத்தார். இந்நிலையில், கடந்த வாரம், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.



 மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனைக்குப் பின்னர் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியல் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிப்பதாகக் கூறினார்.

 இந்நிலையில், இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் தனது முடிவை ரஜினி தெரிவித்துள்ளார். அதில் ஜனவரியில் கட்சி தொடங்க உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு டிச.31 அன்று வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

இப்போ இல்லைன்னா.. எப்பவுமே இல்லை என்ற அவரின் ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவையில் இதே வாசகங்களை கொண்ட போஸ்டர்கள் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டு உள்ளது. 



இந்நிலையில், ரஜினிகாந்த் அறிவிப்பைத் தொடர்ந்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கோவை டவுன்ஹால், மணிக்கூண்டு அருகில் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Newsletter

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...