வால்பாறையில் கிணற்றில் விழுந்த காட்டெருமை பத்திரமாக மீட்பு..!

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை மானாம்பள்ளி வனச்சரகத்திற்குட்பட்ட சோலையார் டேம் அருகில் இடதுகரை என்ற இடத்தில் கிருஷ்ணவேணி, ரவி தம்பதியின் வீட்டின் 10 அடி ஆழம் உள்ள கிணற்றில் ஒரு காட்டு மாடு விழுந்ததாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை மானாம்பள்ளி வனச்சரகத்திற்குட்பட்ட சோலையார் டேம் அருகில் இடதுகரை என்ற இடத்தில் கிருஷ்ணவேணி, ரவி தம்பதியின் வீட்டின் 10 அடி ஆழம் உள்ள கிணற்றில் ஒரு காட்டு மாடு விழுந்ததாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.



ஆனைமலை புலிகள் காப்பகத்தின், வன துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் அவர்களின் அறிவுறுத்தலின் படி, மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் வழிகாட்டுதலின் பெயரில், வனவர் விஷ்ணு தலைமையில் வனக்காவலர்கள் சம்பவ இடத்திற்கு சுமார் 12.15AM மணிக்கு விரைந்தனர். 

கிணற்றின் ஆழத்தில் இருந்த காட்டுமாட்டை மீட்பதற்காக, கிணற்றின் ஒரு புறம் பக்கவாட்டு சுவரை இடிக்கும் பணி விரைவாக மேற்கொள்ளப்பட்டு, பின்பு காட்டுமாடு பத்திரமாக எவ்வித காயங்களும் இன்றி மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட காட்டு மாடு அதன் கூட்டத்தோடு இணைந்து அருகில் உள்ள வனப் பகுதிக்கு சென்றது. 

இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வண்ணம் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு திறந்த வெளி கிணறுகளை மூடுமாறு வனத் துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டது.

மீட்பு பணியில் வனக்காவலர், ராஜசேகர் அரவிந்த், வேட்டை தடுப்பு காவலர், ஜான் பால், மனோஜ்குமார், முருகேசன் ஈடுபட்டனர். 

Newsletter

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...