மக்களை ஏமாற்றுவதில் திமுக தலைவர் ஸ்டாலின் கைதேர்ந்தவர் - உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

கோவை: கோவை அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் பகுதி வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்திற்கு 1620 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை மற்றும் பாலப்பணிகள் துவக்க விழாவினை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார்.

கோவை: கோவை அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் பகுதி வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்திற்கு 1620 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை மற்றும் பாலப்பணிகள் துவக்க விழாவினை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார். 



இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், பாஜக கேரள மாநில பொறுப்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 



இந்நிகழ்ச்சியில் பேசிய உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 10 கி.மீ. பாலம் வேறு எங்குமே கிடையாது. கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்தப் பாலம் கட்டப்பட திட்டமிடப்பட்டுள்ளது, என்று கூறினார். 



மேலும், பேசுகையில், எடப்பாடி பழனிசாமி பாசிட்டிவான முதலமைச்சர் எனவும் கிராமத்தில் இருந்து வந்து பல்வேறு நலத்திட்டங்களை அவர் மக்களுக்கு கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார். ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்யாரோ எழுதித் கொடுக்கும் அறிக்கைகளை பேசுகிறார், என்று கூறினார். 

எந்த திட்டத்தை அறிவித்தாலும், அதை குறை சொல்லிவரும் ஸ்டாலின் செய்வது எல்லாம் ஏமாற்று வேலை எனவும் திமுக மக்களுக்காக எதுவும் செய்யவில்லை, எனவும் அமைச்சர் வேலுமணி குற்றம்சாட்டினார். 

மேலும், மக்களை ஏமாற்றுவதில் ஸ்டாலின் கைதேர்ந்தவர் எனவும் நடைமுறைப்படுத்த முடியாத வாக்குறுதிகளை ஸ்டாலின் அறிவிப்பார் என கூறிய அவர் மக்கள் இனி ஏமாறமாட்டார்கள் எனத் தெரிவித்தார். வரும், 2021 ல் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சராவார் எனவும், அனைத்து தரப்பு மக்களும் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்றுக் கொண்டுள்ளார்கள், எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...