விவசாய விரோத சட்டங்களை திரும்பப்பெறும் வரை கோவையில் தொடர் மறியல் போராட்டம் - இடதுசாரி கட்சிகள் அறிவிப்பு

கோவை: மத்திய அரசின் விவசாய விரோத சட்டங்களை திரும்பப்பெறும் வரை, கோவையில் தொடர் மறியல் போராட்டம் நடத்த போவதாக, டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற்ற இடதுசாரி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கோவை: மத்திய அரசின் விவசாய விரோத சட்டங்களை திரும்பப்பெறும் வரை, கோவையில் தொடர் மறியல் போராட்டம் நடத்த போவதாக, டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற்ற இடதுசாரி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.



"வேளாண் விரோத சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் எழுச்சிகர போராட்டங்களை நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் உணர்வுகளை மதிக்காமல் மத்திய மோடி அரசு போராட்டங்களை ஒடுக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. இதனை கண்டித்து, நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட இயக்கங்கள் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் வியாழனன்று நடைபெற்றது", என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இக்கூட்டத்தின் முடிவாக, விவசாய விரோத மசோதாக்களை திரும்பப்பெற வேண்டும். போராடும் விவசாயிகளை அழைத்துப்பேசி தீர்வு காண வேண்டும். அடக்குமுறைகளை ஏவி, விவசாயிகளை ஒடுக்க நினைக்காதே...! ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரி கட்சிகளின் சார்பில் தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. 

அதன்படி, டிசம்பர் 5 ஆம் தேதி பொள்ளாச்சியிலும், டிசம்பர் 7 அன்று அன்னூரிலும், டிசம்பர் 8 ஆம் தேதி கோவை, காந்திபுரத்திலும், டிசம்பர் 8 மேட்டுப்பாளையம், டிசம்பர் 9 சூலூர்பாப்பம்பட்டி பிரிவு மற்றும் சுல்தான்பேட்டை ஆகிய பகுதிகளில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கட்சி சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் சிவசாமி, தேவராஜ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கருப்பையா, என்.ஜெயபாலன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...