பொள்ளாச்சி: கேரளா வியாபாரிகள் வருகை குறைவால் பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில், தொடர்ந்து நேந்திரன் வாழை விலை வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.

பொள்ளாச்சியில் உள்ள காந்தி மார்க்கெட்டின் ஒரு பகுதியில், வாரம் இருமுறை வாழைத்தார் ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும், தூத்துக்குடி, மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வாழைத்தார்களை கொண்டு வந்து ஏலம் விடுவது வழக்கம்.
இங்கிருந்து, உள்ளூர் விற்பனைக்கும், கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கும் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்து செல்வர். இந்த வாரம், சுமார் 1000 வாழைத்தார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், விலை நிலவரம் குறித்து வியாபாரிகள் கூறுகையில், பூவன் தார் ரூ.200 முதல் ரூ.600 வரையிலும், கற்பூரவள்ளி ரூ.250 முதல் ரூ.700 வரையிலும், மோரிஸ் ரூ.150 முதல் ரூ.500 வரையிலும், ரஸ்தாளி ரூ.200 முதல் ரூ.500 வரையிலும், செவ்வாழை ரூ.300 முதல் ரூ.1000 வரையிலும், நேந்திரன் கிலோ ரூ18க்கும், கதலி கிலோ ரூ.40க்கும் ஏலம் போனது, என்றனர்.
ஊரடங்கு காரணமாக இந்த முறை, சபரிமலை ஐயப்பன் சீசன் முற்றிலும் கை கொடுக்கவில்லை, இதனால் கேரளா வியாபாரிகள் வருகை வழக்கத்தை விட மிக குறைவாகவே உள்ளது. மேலும், மைசூரிலிருந்து நேந்திரன் வாழைத்தார் வரத்து அதிகளவில் வந்துள்ளதால், கடந்த மூன்று வாரங்களாக நேந்திரன் வாழை விலை சரிந்து வருகிறது, என்று வருத்தம் தெரிவித்தனர்.