திருப்பூர்: டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூரில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணியினர் சார்பில் இன்று டிசம்பர் 3 ஆம் தேதி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் தொடர்ந்து 8வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள பல்வேறு விவசாயி அமைப்புகள், அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு தொழிற் சங்கங்கள் போராடி வரும் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
பஞ்சாப் மற்றும் ஹரியானவை சேர்ந்த விவசாயிகள் தலை நகர் டெல்லியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்கள் மத்திய அரசு, விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.