நான்கு ஆண்டுகளாக கிராம வருவாய் ஊழியர்களின் கோரிக்கைகளை புறக்கணிப்பு..! சங்கத்தினர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பொள்ளாச்சி: காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

பொள்ளாச்சி: காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தினரின் 40 ஆண்டு கால கோரிக்கையான வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் நேற்று கிராம வருவாய் ஊழியர்கள் மனு அளித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சியில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை டிசம்பர் 2 ஆம் தேதி வழங்கினர். 

வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகிறோம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, கலைஞர் ஆட்சியில் சில சலுகைகள் வழங்கப்பட்டது. ஆனால், தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நான்கு ஆண்டுகளாக கிராம வருவாய் ஊழியர்களை புறக்கணித்து வருகிறார். கொரோனா காலத்தில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டது. ஆனால், எங்களுக்கு எந்தவித சலுகையும் வழங்கப்படவில்லை, என்று குற்றம் சாட்டினார்கள். 

மேலும், ஜமாபந்தி காலத்தில் பணி, பொங்கல் போனஸ் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். கிராம வருவாய் ஊழியர்களுக்கு இருந்த சலுகைகளையும் இழந்து நிற்கிறோம். முழு பென்சன் 100 சதவீதத்தை, 50 சதவீதமாக அரசு குறைத்துள்ளது. எனவே, இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திரும்பிப் பார்க்காத அரசு எங்களை திரும்பிப் பார்க்கவேண்டும் என்ற வகையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...