கோவையில் திருமண ஆசை காட்டி 9-ம் வகுப்பு மாணவி கடத்தல்...!

கோவை: கோவை சின்னியம்பாளையம் அடுத்து ஆர்.ஜி புதூரில் உள்ள மில்லில் வேலை பார்த்து வரும் தொழிலாளி ஒருவர், அங்கேயே உள்ள மில் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.


கோவை: கோவை சின்னியம்பாளையம் அடுத்து ஆர்.ஜி புதூரில் உள்ள மில்லில் வேலை பார்த்து வரும் தொழிலாளி ஒருவர், அங்கேயே உள்ள மில் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இதில் மூத்த மகள் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். விடுமுறையால், மாணவி வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில், பக்கத்து குடியிருப்பில் வசிக்கும் மில் தொழிலாளி நாகராஜ் (20), என்பவருக்கும் மாணவிக்கும் நட்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனைப் பயன்படுத்திய நாகராஜன், மாணவியிடம் அவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளதாக ஆசை வார்த்தை காட்டியுள்ளார். இதனை நம்பிய மாணவியும் அவருடன் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மாணவி திடீரென மாயமானார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில், தந்தையின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட மாணவி தன்னை நாகராஜ் கடத்தி வந்துள்ளதாகவும், அவரை மீட்டு செல்லும்படியும் கூறியுள்ளார்.

இதையடுத்து, மாணவியின் தந்தை பீளமேடு போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...