நீலகிரி: கூடலூரில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் முதுகில் காயத்துடன் சுற்றித் திரியும் காட்டு யானைக்கு பழங்களில் மாத்திரை வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நீலகிரி: கூடலூரில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் முதுகில் காயத்துடன் சுற்றித் திரியும் காட்டு யானைக்கு பழங்களில் மாத்திரை வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள சிங்காரா வனச் சரகத்தில் யானை ஒன்று முதுகில் காயத்துடன் சோர்வுடன் சுற்றித் திரிவதையறிந்த புலிகள் காப்பக துணை இயக்குநர் ஸ்ரீகாந்த் அந்த யானைக்கு சிகிச்சையளிக்க உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, வனச்சரக அலுவலர் காந்தன் மேற்பார்வையில் கால்நடை மருத்துவர் ராஜேஷ் குமார் சிகிச்சை அளிக்கும் பணியை துவங்கியுள்ளார்.

அதன்படி, முதல் கட்டமாக பழங்களின் மூலம் மருந்து மாத்திரைகளை வைத்து கொடுக்கும் முயற்சி நடைபெறுகிறது. இது நல்ல பலன் அளிக்கும் போது மேற்கொண்டு தீவிர சிகிச்சை அளிப்பது குறித்து மருத்துவக் குழு முடிவு செய்யும் என வன அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.