மருதமலை கோவிலைச் சுற்றி ஏ.டி.எம் மையம் இல்லை - பக்தர்கள் புலம்பல்

கோவை: கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து அன்றாடம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது, ஊரடங்கு தளர்வை தொடர்ந்து கோவிலுக்கு மீண்டும் பக்தர்கள் வரத் தொடங்கியுள்ளனர்.


கோவை: கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து அன்றாடம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது, ஊரடங்கு தளர்வை தொடர்ந்து கோவிலுக்கு மீண்டும் பக்தர்கள் வரத் தொடங்கியுள்ளனர். 

மருதமலை அடிவாரத்தில் ஏ.டி.எம் இல்லாததால், அங்கு வரும் பக்தர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். பணம் எடுக்க வேண்டும் என்றால் அவர்கள், பாரதியார் பல்கலை கழகம் அருகே உள்ள ஏ.டி.எம் வரை செல்ல வேண்டிய நிலையே இருந்து வருகிறது. 

இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், மருதமலை அடிவார பகுதியில் ஏ.டி.எம் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக, தற்போது சபரிமலை மற்றும் தைப்பூசம் சீசன் என்பதால், மருத்மலைக்கு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

மருதமலையில் தங்கும் விடுதிகள் உணவகங்கள் கடைகள், குடிநீர் வசதி, தேவையான கழிப்பறைகள் என பக்தர்களுக்கு தேவையான ஏராளமான வசதிகள் உள்ள நிலையில், ஒரு ஏ.டி.எம் மையம் கூட இல்லை என்பது ஒரு குறையாகவே நீடித்து வருகிறது. 

பணம் எடுக்க, ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக நுழைவு வாயில் உள்ள ஏ.டி.எம் மையத்திற்கு பக்தர்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், வெளியூர் வரும் பக்தர்கள் அடிவாரத்தில் ஏ.டி.எம் இருக்கும் என்று நம்பி ஏமாற்றம் அடைந்த வருகின்றனர். 

இதனால், பக்தர்களின் சிரமத்தை போக்க மருதமலை அடிவாரத்தில் ஏ.டி.எம் மையம் அமைக்க வேண்டும், என பெருவாரியான பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...