ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கடந்த வாரத்தை விட கொப்பரை விலை குவிண்டாலுக்கு ரூ.665 ஏற்றம்; விவசாயிகள் மகிழ்ச்சி

கோவை: ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடந்த ஏலத்தில், கடந்த வாரத்தை விட கொப்பரை விலை குவிண்டாலுக்கு ரூ.665 அதிகரித்து காணப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.



கோவை: ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடந்த ஏலத்தில், கடந்த வாரத்தை விட கொப்பரை விலை குவிண்டாலுக்கு ரூ.665 அதிகரித்து காணப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.



இது குறித்து விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் கூறும்போது, ஆனைமலை சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த விவசாயிகள், 361 மூட்டை கொப்பரைகளை நேற்று விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். வியாபாரிகள் முன்னிலையில் அவற்றை தரம் பிரித்து அதிகாரிகள் ஏலமிட்டனர். முதல் தர கொப்பரை 195 மூட்டைகள் குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ.11.550 -க்கும், அதிகபட்சம் ரூ. 13,010 -க்கும் விற்பனையானது. 2-ம் தர கொப்பரை 166 மூட்டைகள், குவிண்டாலுக்கு அதிகபட்சம் ரூ. 9,010 -க்கும், குறைந்தபட்சம் ரூ. 7,550 -க்கும் விற்பனையானது. 9 வியாபாரிகள், 69 விவசாயிகள் இந்த ஏலத்தில் பங்கேற்றனர்.



குவிண்டாலுக்கு, இந்த வாரம் ரூ.665 விலை அதிகரித்து காணப்பட்டது. கடந்த வாரத்தை விட 29 மூட்டைகள் வரத்து குறைந்து காணப்பட்டது. மொத்தம், 173 குவிண்டால் ரூ.18 லட்சத்துக்கு ஏலமிடப்பட்டது. ஆனைமலை சுற்று வட்டார பகுதிகளில் கொப்பரை உற்பத்தி கடந்த வாரத்தை விட இந்த வாரம் குறைந்து உள்ளதால், வரத்து குறைந்து, விலை அதிகரித்து காணப்பட்டது, என்றார்.

Newsletter

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...