உதகையில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்க அதிநவீன தானியங்கி வாகன எண் பதிவு செய்யும் கேமரா..! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்!

நீலகிரி: உதகையில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்க அதிநவீன தானியங்கி வாகன எண் பதிவு செய்யும் கேமராக்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் இன்று துவக்கி வைத்தார்.


நீலகிரி: உதகையில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்க அதிநவீன தானியங்கி வாகன எண் பதிவு செய்யும் கேமராக்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் இன்று துவக்கி வைத்தார்.



சுற்றுலா நகரமான நீலகிரி மாவட்டம் உதகையில் போக்குவரத்து விதி மீறல்களை தடுக்கும் வகையில் சேரிங்கிராஸ் சந்திப்பில் வாகன பதிவு எண் பதிவு செய்யும் கேமராக்கள் ஐந்து மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் நான்கு என மொத்தம் ஒன்பது கேமராக்கள் காவல்துறை கண்காணிப்பாளர் இன்று துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போக்குவரத்து விதி மீறல்களையும், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாகவும் இவை அனைத்தும் பைபர் கேபிள் இணைப்பு வழியாக மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் பதிவாகும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளதாக கூறினார்.

இதன் மூலம் சாலைகளில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களின் எண் தானியங்கி முறையில் எடுக்கப்பட்ட பின்னர் அவர்களின் முகவரிக்கோ அல்லது கைபேசிக்கு குறுஞ்செய்தி மூலமாக விதிமீறல்கள் தொடர்பான தகவல்கள் அனுப்பப்பட்டு அபராத தொகை நெட் பேங்கிங், SBI Payment Gateway மற்றும் ATM Card மூலம் ஆன்லைன் வாயிலாக செலுத்தும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், இந்த அதிநவீன தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சாலை விதிமுறை மீறல் குற்றச் செயல்களை தடுக்கும் வகையிலும் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணி நடைபெறுமென மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...