கோவையில் 100 மாஸ்க் மொத்தமாக கேட்டு தகராறு செய்த பேராசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு!

கோவை: கோவையில் 100 மாஸ்க் மொத்தமாக கேட்டு தகராறு செய்த பேராசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.



கோவை: கோவையில் 100 மாஸ்க் மொத்தமாக கேட்டு தகராறு செய்த பேராசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை க க சாவடி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (48), இவர் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை செய்து வருகிறார். ஊரடங்கு காரமாக கடந்த 6 மாதமாக வீட்டிலிருந்து வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று கா.கா சாவடியில் உள்ள எட்டிமடை பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்த கார்த்திகேயன் அங்கு பணியில் இருந்த பேரூராட்சி செயல் அலுவலர் கந்தசாமிடம் நூறு மாஸ்க்குகள் தேவைப்படுவதாக கூறினார்.

அப்போது, ஒரே நபருக்கு 100 மாஸ்க்குகள் கொடுக்க முடியாது. ஏற்கனவே அரசு நியாயவிலைக் கடைகளில் மாஸ்க் கொடுப்பதாக செயல் அலுவலர் கூறியுள்ளார். ஆனால், அனைத்து அலுவலகத்திலும் மாஸ்க் கொடுக்க வேண்டும். தனக்கு உடனடியாக 100 மாஸ்க்குகள் வேண்டும் எனக்கூறி செயல் அலுவலரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து, அவர் உடனடியாக காக்கா சாவடி போலீசாருக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த போலீசார் விசாரித்த போது மீண்டும் கார்த்திகேயன் போலீசாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, எட்டிமடை பேரூராட்சி செயல் அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் உதவி பேராசிரியர் கார்த்திகேயன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...