கோவை: கோவையில் 100 மாஸ்க் மொத்தமாக கேட்டு தகராறு செய்த பேராசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை: கோவையில் 100 மாஸ்க் மொத்தமாக கேட்டு தகராறு செய்த பேராசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை க க சாவடி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (48), இவர் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை செய்து வருகிறார். ஊரடங்கு காரமாக கடந்த 6 மாதமாக வீட்டிலிருந்து வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று கா.கா சாவடியில் உள்ள எட்டிமடை பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்த கார்த்திகேயன் அங்கு பணியில் இருந்த பேரூராட்சி செயல் அலுவலர் கந்தசாமிடம் நூறு மாஸ்க்குகள் தேவைப்படுவதாக கூறினார்.
அப்போது, ஒரே நபருக்கு 100 மாஸ்க்குகள் கொடுக்க முடியாது. ஏற்கனவே அரசு நியாயவிலைக் கடைகளில் மாஸ்க் கொடுப்பதாக செயல் அலுவலர் கூறியுள்ளார். ஆனால், அனைத்து அலுவலகத்திலும் மாஸ்க் கொடுக்க வேண்டும். தனக்கு உடனடியாக 100 மாஸ்க்குகள் வேண்டும் எனக்கூறி செயல் அலுவலரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து, அவர் உடனடியாக காக்கா சாவடி போலீசாருக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த போலீசார் விசாரித்த போது மீண்டும் கார்த்திகேயன் போலீசாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, எட்டிமடை பேரூராட்சி செயல் அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் உதவி பேராசிரியர் கார்த்திகேயன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.