கோவை குனியமுத்தூர் அருகே மகளுடன் விஷம் குடித்த தாய் பரிதாபமாக உயிரிழப்பு!

கோவை: கோவை குனியமுத்தூர் அருகே மகளுடன் விஷம் குடித்த தாய் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை குனியமுத்தூர் அருகே மகளுடன் விஷம் குடித்த தாய் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குனியமுத்தூர் வெற்றிலைகாரர் வீதியைச் சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியர் சந்திரசேகர் (50). இவரது மனைவி செல்வராணி (42), இவர்களது மகள் கீர்த்தி (16), ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், செல்வராணிக்கு வயிற்று வலி இருந்தது. இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றார். ஆனால், குணமாகவில்லை. இதனால் விரக்தியடைந்த அவர், வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்தார். ஆனால், மகளை விட்டுச் செல்ல மனமில்லை. இது குறித்து மக்களிடம் தெரிவித்தார். மகளும் தாயுடன் தற்கொலை செய்து கொள்ள சம்மதித்தார்.

அதன்படி, நேற்று மாலை இரண்டு பேரும் வீட்டில் சாணி பவுடர் குடித்தனர். வேலைக்கு சென்ற சந்திரசேகர் இரவு வீடு திரும்பிய போது, மனைவியும் மகளும் வாயில் நுரை தள்ளிய படி மயங்கி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் இரண்டு பேரையும் மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராணி பரிதாபமாக இறந்தார்.

இதனை தொடர்ந்து, மாணவி கீர்த்திக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் 174 சட்டப் பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...