கோவை ரேஸ்கோர்ஸ் மாதிரி சாலை: திறந்தவெளி அரங்கம், சாலையோர சிற்றுண்டி கடைகள் அமைக்க பணிகள் தீவிரம்..!

கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாதிரி சாலைப்பணிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில், திறந்தவெளி அரங்கம், சிந்தட்டிக்தரைதளத்துடன் கூடிய குழந்தைகள் பூங்கா போன்றவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.


கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாதிரி சாலைப்பணிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில், திறந்தவெளி அரங்கம், சிந்தட்டிக்தரைதளத்துடன் கூடிய குழந்தைகள் பூங்கா போன்றவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை ஸ்மார்ட் சிட்டித் திட்டத்தின் ஒரு பகுதியாக ரேஸ்கோர்ஸ் சாலையை மாதிரி சாலையாக அமைக்க திட்டமிடப்பட்டு, மாநகராட்சி சார்பில் ரூ.40.70கோடி மதிப்பீட்டில் மாதிரி சாலை அமைக்கும் பணிகளை ஜூன் மாதம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி துவக்கி வைத்தார்.

துரிதமாக நடைபெற்று வரும் கோவை ரேஸ்கோர்ஸ் மாதிரி சாலை பணிகள் குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்:

ரேஸ்கோர்ஸ் மாதிரி சாலை பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தில், அப்பகுதியில் உள்ள சாலைகள், சீரான அகலமுள்ள சாலைகளாக குறிப்பிடத்தக்க வளைவுகளுடன் தரமாக வடிவமைக்கப்பட உள்ளது.

இச்சாலையில், உள்ள அனைத்து சந்திப்புகளும் மறு வடிவமைப்பு செய்யப்பட்டு அகலப்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக, அரசு கலைக்கல்லூரி அருகே மக்களின் பொழுது போக்கிற்காக திறந்தவெளி அரங்கம் அமைக்கபடவுள்ளது. பாதசாரிகள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வோருக்கு ஏதுவாக நடைபாதை அமைக்கப்பட உள்ளது.

அதில், குறிப்பிட்டதக்க சில பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட கடைகள் அமைப்பதற்கான இடம் விடப்பட்டுள்ளது. இந்த கடைகள் சாலையின் வெளிப்புறம், 4.மீ அகலமுள்ள நடைபாதையில் அமைக்கப்படுகிறது. அதே போல், வாகனங்கள் நிறுத்த பிரத்யேக இடங்கள் அமைக்கப்படவுள்ளது. மக்கள் எளிதாக நடந்து செல்லும் வகையில் சாலையின் இருபுறங்களிலும் பாதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

மழை காலங்களில், நீர் தேங்காமல் இருக்க மழைநீர் வடிகால்கள் ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும், இரண்டு இடங்களில் திறந்த வெளியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக உடற்பயிற்சிக் கூடங்கள், சிந்தட்டிக் தரையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் பொழுது போக்கிற்காக, சிந்தட்டிக் தரைதளத்துடன் கூடிய குழந்தைகள் பூங்கா, விளையாட்டு உபகரணங்களுடன் மிகவும் அழகான முறையில் அமைக்கப்பட உள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பறைகள், பாதுகாப்பு அறைகள் மற்றும் நிழற்குடைகள் சிறந்த முறையில் அமைக்கப்பட உள்ளது. மக்களின் வசதிக்காக இலவச தொலைத்தொடர்புகள், பாதுகாப்பு வசதிக்காக பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், சாலையோரங்களில் சிற்றுண்டி கடைகள் போன்றவையும் அமைக்கப்பட உள்ளது. மேலும், மழை காலங்களில், புயல் போன்ற நேரங்களில் மின்சாரம் தடைப்படாமல் கிடைக்க மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் போன்றவைகள் நிலத்திற்கு அடியில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் அப்பகுதி முழுவதும் வண்ணமிகு மின் விளக்குகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் முடிவடைந்த பின்பு ரேஸ்கோர்ஸ் பகுதி மிகவும் கூடுதல் அழகாக மாறிவிடும், இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...