கோவை: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 21ம் தேதி நடைபெற்ற கொலை வழக்கில் 3 அடையாளம் தெரியாத குற்றவாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில், அவர்கள் இன்று கோவை சாய்பாபா காலனி போலீசாரிடம் சரணடைந்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ராமநாதபுரம் மாவட்ட கொலை வழக்கு குற்றவாளிகள் மேட்டுப்பாளையம் ரோடு சோதனைச் சாவடியில் சாய்பாபா காலனி காவல் துறையினரிடம் சரணடைந்தனர். 21.11.2020 தேதி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் உட்கோட்டம் துறைமுகம் காவல்நிலைய சரகம் அந்தோணியார் சர்ச் அருகில்முருகநாதன், சண்முகவேல், தர்மர், வேலுச்சாமி ஆகியோர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாகச் சென்ற ஒருவரைக் காண்பித்து, அவன் எனது எதிரி அவனைக் கொன்றுவிடுங்கள் என்று வேலுச்சாமி கூறி சென்றுவிட்டார். தாங்கள் அடையாளம் தெரியாமல் மனோஜ் என்பவரை கொன்று விட்டதாகவும் கூறி சரணடைந்தனர்.
இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் துறைமுகம் காவல்நிலையத்தை தொடர்புகொண்டு சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டது. துறைமுகம் காவல் நிலையம் குற்ற எண் 254/20 U/S 302 IPC எதிரிகள் தெரியாது என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சாய்பாபா காலனி காவல் நிலையத்தை தொடர்புகொண்டு உடனடியாக குற்றவாளி அழைத்து வர நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
அதன்படி, 1)முருகநாதன் (39), தந்தை பெயர் கோட்டைசாமி ஆப்பனூர், அரிய நாதபுரம், ராமநாதபுரம் மாவட்டம். 2)சண்முகவேல் (42), தந்தை பெயர் ஜெகநாதன், மேல குடியிருப்பு, மாரந்தை, கடலாடி, ராமநாதபுரம். 3)தர்மர் (48) தந்தை பெயர் ராமு, சிறுகுடி, மாரந்தை, கடலாடி ராமநாதபுரம் ஆகியோரை நிலையத்தில் வைத்துள்ளனர்.
இதனிடையே, குற்றவாளிகளை அழைத்துச் செல்ல ராமநாதபுரத்தில் இருந்து உதவி ஆய்வாளர் முத்து முனியசாமி என்பவர் தலைமையில் போலீசார் கோவை வந்து வந்து கொண்டுள்ளனர்.