கோவையில் இளைஞரின் உயிரைப் பறித்த சாலை பள்ளம்..! மழையினால் சாலையில் ஏற்பட்ட குழியில் விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு!

கோவை: கோவை சிங்காநல்லூர் அருகே பைக்கில் வந்த வாலிபர் மழையினால் ஏற்பட்ட குழியில் தவறி விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை சிங்காநல்லூர் அருகே பைக்கில் வந்த வாலிபர் மழையினால் ஏற்பட்ட குழியில் தவறி விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூலூர் அருகே வி.கே.என் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் இயந்திர உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மகன் கௌதம் (26), தந்தை நடத்தும் கடையை மேற்பார்வை செய்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று கௌதம் தனது பைக்கில் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சூலூரில் இருந்து சோமனூர் சென்று கொண்டிருந்தார். ரயில்வே பீடர் ரோட்டில் தனியார் கம்பெனி ஒன்று உள்ளது. அங்கு மழையால் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தில் கௌதம் வந்தபோது பள்ளத்தில் தவறி விழுந்து பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர், இது குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கௌதம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...