பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எஸ். மலையாண்டி பட்டணத்தில் 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக ஆதரவு பெற்ற, மயில்சாமி ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், வார்டு உறுப்பினர்களாக அன்புச்செல்வி, நாச்சிமுத்து, வெற்றிவேல் முருகன், ரவியும், துணைத்தலைவராக ரவி (பா.ஜ.க) ஊராட்சி துணைத் தலைவராக தேர்வானார்.

இந்நிலையில், ஊராட்சி பணிகளை வார்டு உறுப்பினர்களான அன்புச்செல்வி, நாச்சிமுத்து, வெற்றிவேல் முருகன், ஆகியோர் சரிவர செய்வதில்லை எனவும், ஊராட்சி பணிகளை முடக்குவதில் ஆர்வம் காட்டி வருவதாகவும், குற்றம் எழுந்துள்ளது.

மேலும், தமிழக அரசின் விலையில்லா கால்நடைகள் வழங்கும் திட்டத்தில் துணைத்தலைவர், தலையீடு செய்து வருவதாகவும், ஊராட்சி பணிகள் எதையும் செய்யவிடாமல் துணைத் தலைவர் ரவி முட்டுக்கட்டை போடுவதாக, கூறி 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.
மேலும், ஊராட்சி உறுப்பினர்கள் வெற்றிவேல் முருகன், அன்புச்செல்வி, நாச்சிமுத்து ஆகியோர் ஊராட்சியின் வளர்ச்சிப் பணிகளை செய்வதில் முட்டுக்கட்டையாக இருப்பதால், அவர்களையும் தகுதி நீக்கம் செய்யவும் ஊராட்சி துணைத் தலைவரின் அதிகாரங்களை ரத்து செய்திட வேண்டும், என வலியுறுத்தி ஊராட்சி தலைவர் மயில்சாமி தலைமையில் பொள்ளாச்சி சார்-ஆட்சியர் வைத்திநாதனிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.